Saturday 1 March 2014

7 டி பஸ் தெரியும்.. 7டி டெக்னாலஜி தெரியுமா உங்களுக்கு?

3 டி, 5 டி வரிசையில் இப்போது 7 டி தொழில்நுட்பம் சினிமா மற்றும் பொழுது போக்கு துறையில் சைக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. 3 டி தொழில் நுட்பத்தை பொறுத்த வரை அதில் வெளி வரும் படங்களுக்குள் நாமே சென்று விட்டது போல் காட்சிகள் நம் பக்கத்தில் வந்து நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். அவதார், மடகாஸ்கர் என பல ஹாலிவுட் படங்கள் இந்த 3 டி தொழில் நுட்பத்தில் வந்து நம்மை வியப்பிற்கு உள்ளாக்கியது. மேலும்,இந்த வரிசையில் தமிழ் படங்களும் கலந்து கட்டி அடித்தன

பட்டையை கிளப்பிய 5 டி: அதனைத் தொடர்ந்து 5 டி தொழில் நுட்பமும் அதற்கு ஒரு படி மேலாக இன்னும் துல்லியமான ஐந்து பரிமாண காட்சிகளை நமக்கு அளித்தது.

தூக்கி சாப்பிட்ட 7 டி: ஆனால்,தற்போது இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் 7 டி மக்களை வியப்பில் ஆழ்த்து வருகிறது.

அர்னால்டை கூட பக்கத்தில் பார்க்கலாம்: இதன் மூலம் நாம் உண்மையான உருவ அமைப்புகளையே பக்கத்தில் உணர முடியும்.மேலும் 3 டி யில் நாம் காட்சி அமைப்புகளை மட்டுமே முப்பரிமாணமாக படத்தில் உணர முடியும்.

துல்லியமான காட்சிகள்: ஆனால்,7 டியில் நாம் முழுமையான உருவங்கள் மற்றும் ஒலி,ஒளிகளையும் கூட துல்லியமாக நாம் பக்கத்தில் பார்த்து உணர முடியும் என்பதுதான் இத்தொழில் நுட்பத்தின் சிறப்பாகும்


Saturday 15 February 2014

விண்டோஸ் 7 காலம் நீட்டிப்பு

இன்றைக்கு விண்டோஸ் 8 சிஸ்டம் அறிமுகப்படுத்தியவுடன், மைக்ரோசாப்ட் பழைய சிஸ்டங்களுடன் கம்ப்யூட்டர் வடிவமைப்பவர் களுக்கு, இறுதி நாளினை நிர்ணயம் செய்தது.                                                                                                                                                                                                                                                                      அதற்குப் பின்னர், அந்நிறுவனங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான், கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட வேண்டும் என்பது ஒப்பந்தம்.                                                                                                                                                                               ஆனால், விண்டோஸ் 8 மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. விண்டோஸ் 7 தொடர்ந்து கம்ப்யூட்டர்களில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் இடம் பெற்றது.                                                                                                                                                                   ஆனால், தன் விண்டோஸ் 8.1 மூலம் சிக்கல்களை ஓரளவுக்குத் தீர்த்து வைத்த மைக்ரோசாப்ட், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இறுதி நாளை அறிவித்தது. பின்னர், அதனை வாபஸ் பெற்றது.                                                                                                                                                                                                                                 மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டு, பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், லேப்டாப் கம்ப்யூட்டர்களையும் வடிவமைத்து விற்பனை செய்து வரும் ஹ்யூலட் பேக்கார்ட் (எச்.பி.) நிறுவனம், மக்கள் தொடர்ந்து விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே விரும்புவதால், மீண்டும் விண்டோஸ் 7 சிஸ்டம் பதிக்கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களை வடிவமைத்து வழங்க முன் வந்து வழங்கியும் வருகிறது.                                                                                                                                                                                                                                                                   விரும்பும் மக்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தினை கைவிட்டு விடவில்லை. அதனைக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு, விண்டோஸ் 8 பதிந்து தருகிறோம் எனவும் அறிவித்துள்ளது.                                                                                                                                                                                                                                                                               பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை சரிந்து வருவதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதனை மிகக் கண்டிப்புடன் கண்டு கொள்ளவில்லை.                                                                                                                                                                                                                                                                                          ஆனால், மீண்டும், விண்டோஸ் 7 சிஸ்டம் வழங்குவதை நிறுத்தச் சொல்லி, மைக்ரோசாப்ட் அறிவுறுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்                                                                            source:oneindia